ரயில் நிலையம் பெயர் மாற்றம் தொடர்பாக எந்த தகவலும் அளிக்கவில்லை : சத்யபிரத சாஹூ விளக்கம்

share on:
Classic

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையருக்கு துரைசாமி என்கிற வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை மூடிவைப்பதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எப்படி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியானது என அதில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan