"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"

share on:
Classic

குக்கர் சின்னத்தை ஒதுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் சின்னம் குறித்த இந்த வழக்கில் எந்தவித பின்னடைவு இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி தினகரன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், குக்கர் சின்னத்தை ஒதுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் இதற்க்கு கருத்து தெரிவித்த தினகரன் "சின்னம் என்பது ஒரு பெரிய விசயம் கிடையாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். மேலும், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனவே சின்னம் குறித்த இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர் சின்னம் குறித்த இந்த வழக்கில் எந்தவித பின்னடைவும் இல்லை" என தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth