வேலூரில் தேர்தல் ரத்து தொடர்பாக "எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை"

share on:
Classic

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ. 10 லட்சம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 10-ஆம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் 2 திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan