இந்தியா-ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி : தீவிர பயிற்சியில் ஆஃப்கானிஸ்தான்  அணி

Classic

இந்தியா-ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதற்காக ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது அண்மையில் அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை வழங்கியது. அதன்படி அயர்லாந்து அணி பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதனையடுத்து, ஆஃப்கன் அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் இந்தியாவுடன் வரும் 14ஆம் தேதி பெங்களூருவில் விளையாடுகிறது. இதற்காக ஆஃப்கானிஸ்தான் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ஆஃப்கன் அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் தொடரில் களம் காண்கிறது. 

ஐபிஎல் தொடரில் கலக்கிய ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய அமீர் ஹம்சா-வும் அணியில் உள்ளார். தவிர, 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக்ககோப்பை தொடரில் விளையாடிய ஜாகீர் கானுக்கும் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, போட்டிக்காக ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் பெங்களூரு வந்தடைந்தனர். பெங்களூருவில் உள்ள மைதானத்தில் ஆஃப்கன் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியாவை எப்படியும் வீழ்த்த வேண்டிய யுக்தியில் உள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ரஷித் கான் அணிக்கு மிகுந்த நம்பிக்கையாக உள்ளார்.  

அதேபோல், இந்திய அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். காயத்தால் விருத்திமான் சாஹா விலகியதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ஆகையால், இந்த போட்டியில் வெற்றி முனைப்பில் இந்திய அணி வீரர்களும் உள்ளனர்.

 

News Counter: 
100

aravindh