1,35,000 கனஅடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்வரத்து..! மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

share on:
Classic

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக உயர்ந்ததை அடுத்து, 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து காலை முதலே அதிகரிக்கத் தொடங்கியது. காலையில் 35,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிபடியாக உயர்ந்ததால், 120 அடியை கொண்ட மேட்டூர் அணை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. 

இதையடுத்து, சுமார் 3 மணி அளவில் ஆயிரக்கணக்கக்கில் இருந்து நீர்வரத்து, ஒரே அடியாக உயர்ந்து ஒரு லட்சத்து 35 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணையில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அணைக்கான மொத்த நீர்வரத்தும் அப்படியே திறந்துவிடும் பட்சத்தில், சேலம் சுற்றுவட்டார பகுதிகளான தேங்கமாபுரிபட்டினம், ரெட்டியூர், கோல்நாயக்கன்பட்டி, பூலாம்பட்டி, பன்னவாடி, ஏரியூர், நாகமலை ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காவிரி ஓடும் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையத்தின் ஜலாதா நகர், குமாரபாளையத்தின் மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் வீதி ஆகியவையும், ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் காவிரிக்கரை, வைரபாளையம், அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, சித்தார், பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளும் வெள்ள அபாய எச்சரிக்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

மேலும், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், வாங்கல், நெரூர், கட்டளை, மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை பகுதிகள், திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், மணச்சநல்லூர், குணசீலம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, அம்மா மண்டபம், கீதாபுரம், ஓயாமாரிபடித்துறை, கிழடுமண்டபம், கிளிக்கோடு பணயபுரம், பணையக்குறிச்சி, ஒட்டக்குடி, கூசத்துறை ஆகிய பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

 

News Counter: 
100
Loading...

aravindh