Nokia 3.1 பிளஸ்-ன் விலை குறைப்பு....சீக்கரமா வாங்கிடுங்க..!

share on:
Classic

HMD Global Nokia 3.1 பிளஸ் மொபைலின் விலையை குறைத்து அறிவித்துள்ளது.

மேலும், மற்றொரு விருந்தாக நோக்கியா 5.1 பிளஸ் மொபைலின் அறிமுக விற்பனை விலை ரூ. 11,449- லிருந்து ரூ.9999 ஆக குறைந்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இந்த புதிய விலையில் விற்பனை ஆரம்பமாகிவிட்டது. ரூ.10,000க்கும் கீழ் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு நோக்கியா 3.1 பிளஸ் மொபைல் வெளியிடப்பட்டுள்ளது.
 

நோக்கியா 3.1 அமைப்பு மற்றும் செயல் திறன் : 

6 inches HD+ IPS (in-plane switching) டிஸ்பிலே 18:9 விகிதத்துடன் 2D Curved திரையை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துடன் மாத பாதுகாப்பு அப்டேட் சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. மேலும், தற்போது வெளிவந்துள்ள ஆண்ட்ராய்டு பை ( Android Pie ) இயங்குதளத்திலும் செயல்படும்.

மேலும், நோக்கியா 3.1 பிளஸ் மீடியா டெக் 6762 ஹீலியோ P22 (4X2Ghz + 4X1.5 Ghz) செயலியை பெற்று  2GB மற்றும் 3GB RAM உடன் 16GB மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜை பெற்றுள்ளது. மேலும் மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 400 GB வரை சேமிப்பு திறனை அதிகரித்து கொள்ள முடியும்.

13MP + 5MP கொண்ட இரண்டு பின்பக்க கேமரா மற்றும் போக்கே (bokeh) வசதியுடன் கூடிய 8 MP திறன் கொண்ட முன்பக்க கேமரா போன்ற அம்சங்களை நோக்கியா 3.1 பிளஸ் மொபைல் பெற்றுள்ளது.

3,500 mAh பேட்டரி சேமிப்பு திறனுடன், டூயல் சிம், 4G வோல்ட், வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் என பிற வசதிகளையும் பெற்றுள்ளது.   

 

News Counter: 
100
Loading...

youtube