வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு..!

share on:
Classic

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்தது. 

வேலூர் நடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 22-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind