காங்கிரஸ் , பாஜக அல்லாத 3வது அணி : சந்திர சேகர ராவிற்கு தடையாக உள்ளாரா சந்திரபாபு நாயுடு..?

share on:
Classic

காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய அணியை உருவாக்கு சந்திரசேகர ராவின் முயற்சிக்கு சந்திரபாபு நாயுடு முட்டுகட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது. 

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தேசிய அளவில் 3 வது அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினையும் சந்தித்த சந்திரசேகர ராவ், கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், 3வது அணி அமைய வாய்ப்பில்லை என்று கூறிய ஸ்டாலின், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தெரிவித்தார்.

இதனிடையே காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகளை திரட்டி மத்தியில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இதனால் சந்திரசேகர ராவின் 3வது அணிக்கான முயற்சிக்கு சந்திரபாபு நாயுடு முட்டுகட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் மாநிலத் தலைவர்களை ஒருங்கிணைத்து திமுக, காங்கிரஸ் அல்லாத, புதிய கூட்டணியை உருவாக்கி வருகின்றனர். 
 

News Counter: 
100
Loading...

Ramya