வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..!

share on:
Classic

மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டிருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்ததால், கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக அமெரிக்கா - வடகொரிய இடையே போர் பதற்றம் உருவானது. இதனையடுத்து டிரம்ப் - கிம் ஜாங் உன் இடையே 2 முறை சந்திப்பு நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து ஏவுகணை சோதனையில் வட கொரியா மீண்டும் ஈடுபட்டுள்ளது. குற்றிபாக சின் ரியோ பகுதிக்கு அருகே 420 கிலோ மீட்டர் தொலைவில் 2 ஏவுகணைகளை கொண்டு வடகொரியா சோதனையில் ஈடுபட்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அமெரிக்கா உயர் அதிகாரிகள் தென்கொரியா சென்றுள்ளனர். அங்கு வடகொரியாவின் நடவடிக்கைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan