ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே பங்கேற்கும் நாடாளுமன்ற தேர்தல்

share on:
Classic

ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிடும் வடகொரியாவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடந்தது. 

வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்கள் வாக்களிப்பது என்பது கட்டாயமானதாகும், அதன்படி ஒவ்வொரு வருடமும் 100 சதவீதம் ஒட்டிய அளவிலேயே வாக்குப்பதிவு இருக்கும். வடகொரியாவில் பல தலைமுறைகளாக அதிபர் கிம் ஜாங் உன் இன் வம்சாவளிகள்தான் ஆட்சி செய்து வருகின்றனர். இந்நாட்டு பொதுமக்கள் கிம் ஜாங் உன் குடும்பத்துக்கு விஸ்வாசமாக இருக்கவேண்டும் என்பது கடமையாகும். 

இதில் பொதுமக்களுக்கு ஒரே ஒரு வாக்குச்சீட்டு கொடுக்கப்படும், அதை வாங்கி வாக்குப் பெட்டிக்குள் போட்டுவிட்டு சென்றுவிட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளராக கிம் ஜாங் உன் மட்டுமே போட்டியிடுவார். இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு கிம்ஜாங் உன் மட்டும் போட்டியிட்ட தேர்தலில் 99.97 சதவீதம் வாக்குப் பதிவானது. இதில் விடுப்பட்ட 0.3 மூன்று சதவீத வாக்குகள், உடல்நிலை காரணமாக பங்கேற்காமல் போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

Ragavan