ரஜினி போல குழப்பத்தில் நான் இல்லை... முத்தையா முரளிதரன் பளீர்

share on:
Classic

ரஜினிகாந்த் போல அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பம் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் மண்டல கல்வி அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய முரளிதரன், ”தோட்டத் தொழிலாளர்களின் தினசரி அடிப்படை ஊதியம் ரூ. 1,000-ஆக இருக்க வேண்டும் என்பதால் தற்போதைய சம்பளம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. தொழிலாளர்கள் சூழ்நிலையை கருத்தில் கொள்ளவும், ஊதியங்களை அதிகரிக்கவும் அரசியல்வாதிகள் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்களை வலியுறுத்தினார். ரூ. 20,000 வைத்து ஒரு குடும்பத்தை இன்றைய காலக்கட்டத்தில் நம்மால் வாழ்வது கடினம். கணவன் மனைவி இருவரும் பணிக்கு சென்றால் மட்டுமே ஒரு குடும்பத்தை நடத்த முடியும். 

அனைவருக்கும் வருமானத்தை உயர்த்த வேண்டும். இதை பற்றி பேசினால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள். ரஜினிகாந்த் இந்தியாவில் கூறுவது போல வருவேன் வரமாட்டேன் என்று குழப்பத்தில் நான் இல்லை. நான் அரசியலுக்கு வரவே மாட்டேன். நான் செய்வது அரசியல் இல்லை. சேவை தான் செய்கிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறது. மக்களுடைய தேவைகளை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன்” இவ்வாறு அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

aravind