ராணுவத்தை பயன்படுத்த தயங்கப் போவதில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Classic

அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ராணுவத்தை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் உள்ள கரிக்காட்டு குப்பம், சுனாமி குடியிருப்பில் உள்ள அரசு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றும்படி, 2018 ஜனவரி மாதம், கரிக்காட்டு குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டது. ஆனால் ஓராண்டு நெருங்கிய நிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், அரசுக்கு எதிராக ஜான்சி ராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை இன்றுக்குள் அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிடுவதாக தெரிவித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் ராணுவத்தை வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட தயங்கப்போவதில்லை எனவும் எச்சரித்தனர்.

News Counter: 
100
Loading...

aravind