எத்தனை பிரச்னைகள் வந்தாலும் முடிவில் பின்வாங்க மாட்டேன் - மைத்திரிபால சிறிசேன உறுதி

share on:
Classic

பிரதமர் பதவிக்கு சிறிதும் பொருத்தமற்றவர் ரணில் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கூறியிருப்பது, அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றதன் பிறகான முதலாவது பொதுக்கூட்டம் இலங்கையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ராஜபக்சேவுடன், அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டார்.

அப்போது பேசிய சிறிசேனா, நாட்டிற்கு பொருத்தமற்ற ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ராஜபக்சேவை அப்பதவியில் அமர்த்தியுள்ளதாகவும், தமது இந்த முடிவை 80 சதவிகிதம் மக்கள் வரவேற்றிருப்பதாகவும் கூறினார்.

50ஆயிரம் வீடமைப்பு திட்டமானது அமைச்சர்களின் இழுபறியால் கைகூடாமல் போனதாகவும், இந்திய அரசிடமிருந்து தம்மை பிரிப்பதற்கு ரணில் சதி வேலையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்திய அரசுடனான உறவை பலப்படுத்த முயற்சித்து வருவதாக கூறிய சிறிசேனா, நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உறுதியாகி விட்டதாகவும் கூறினார்.

மேலும், எந்த அழுத்தம் வந்தாலும் பிரதமரை மாற்றும் முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

sasikanth