’ திரையில் மட்டும் அல்ல நிஜ வாழ்விலும் சூப்பர் ஸ்டார் தான் ‘

share on:
Classic

தனது கடுமையான உழைப்பாலும் விடா முயற்சியாலும் திரையில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நிஜத்திலும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். 

ரஜினியின் உதவும் உள்ளம்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே நம் நினைவிற்கு வருவது அவரது ஸ்டைலான நடிப்பு, உற்சாகமான முகம், பரபரப்பான பேச்சு, துள்ளலான நடை என சொல்லிக்கொன்டே போகலாம். அவரது மனிதநேயத்தை பற்றி பலரும் கூற நாம் கேட்டிருப்போம். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உதவிகளையும் விளம்பரம் இல்லாமல் அமைதியாக செய்து வருகிறார்  ரஜினிகாந்த், அப்படி அவரது உதவியால் பயன் அடைந்தவர்களில் ஒருவர் தான் மதி. இவர் போஸ்டர்- பேனர் டிசைனராக இருக்கிறார். பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் அவரது படங்களுக்கு பேனர் டிசைன் செய்ய இவரை தான் நாடுகின்றனர்.

ரஜினியால் போஸ்டர் டிசைனாரான மதி:

போஸ்டர் டிசைனரான மதிக்கு ரஜினியின் அறிமுகம் எப்படி கிடைத்தது குறித்து அவர் கூறுகிறார். “எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம், எனது அம்மா ரஜினி வீட்டில் வேலை செய்தார்கள். ரஜினி சார் தான் எனக்கு பள்ளிக்கட்டணம் கொடுத்து படிக்க வைத்தார். எனது தாத்தா போயஸ் கார்டனில் மாநகராட்சி ஊழியராக இருந்தார், அவரும் சில நேரங்களில் ரஜினி வீட்டில் வேலை செய்வார். அதனால் சூப்பர் ஸ்டார் நியூஸ்பேப்பர் படிக்கும் போது எனது தாத்தாவுடன் பேசுவார். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு எங்கள் மொத்த குடும்பமும் ரஜினி சாரின் வீட்டிற்கு செல்வோம். எங்களுக்கு ரஜினி சார் புது உடைகள் மற்றும் இனிப்புகளை வழங்குவார். எனது தாத்தாவிற்கு பணமும் கொடுப்பார்”என்றார் மதி.

 

காலில் விழுவதை கண்டித்த ரஜினி: 

ரஜினிக்கு யாரும் தன் காலில் விழுவது பிடிக்காது என்று கூறுகிறார் மணி. “ஒரு முறை அவரது போயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் அவர் எங்களை ரஜினி சாரின் அடையார் வீட்டிற்கு வர சொன்னார். அவர் காரில் வந்து இறங்கியவுடன் சிலர் அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆனால் ரஜினி அவர்களை இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கண்டித்தார். பிறகு கூட்டத்தில் இருந்த எங்களை கவனித்த ரஜினி, எங்களை மேலே வர சொன்னார். நாங்கள் மேலே சென்றவுடன் நீண்ட நேரம் காத்திருக்கீங்களா என்று மரியாதையாக கேட்டார் ரஜினி சார்” என்று விரிவாக கூறினார் மணி.

 

நிஜத்திலும் சூப்பர் ஸ்டார்:

ரஜினிகாந்த் வீட்டில் நடந்ததை நினைவு கூர்ந்த மணி, தான் ரஜினிகாந்த்-க்கு கடன் பட்டுள்ளேன் என்று உருக்கமாக தெரிவித்தார். “ நாங்கள் வறுமையில் போராடிய போது ரஜினி சார் எங்களுக்கு உதவி செய்தார், அவரால் தான் எனக்கு நல்ல கல்வி கிடைத்தது. அதனால் நான் அவருக்கு திரும்ப ஏதாவது செய்ய வேண்டும், ரஜினி சாரின் போஸ்டர் மற்றும் பேனர்களை டிசைன் பெருமையும், சந்தோஷமும் அடைகிறேன்” என்று உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தார் மணி. எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அந்த புகழை தலைக்கு ஏற்றாமல்,  எளிமை, பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் விதம், இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளிட்ட குணங்களை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் சூப்பர் ஸ்டார் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. 

News Counter: 
100
Loading...

youtube