பனிமனிதன் அல்ல, கரடியின் கால்தடம் : இந்திய ராணுவத்திற்கு நேபாளம் பதில்..

share on:
Classic

நேபாள எல்லைப்பகுதியில் எட்டி எனப்படும் பனிமனிதனின் கால்தடத்தை பார்த்ததாக இந்திய ராணுவம் தெரிவித்ததை நேபாள அரசு மறுத்துள்ளது. 

நேபாளத்தின் மகாலு பருன் என்ற பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினர் மர்மமான புராண உயிரினமான, எட்டி எனப்படும் பனிமனிதனின் கால்தடத்தை பார்த்ததாக, அந்த புகைப்படத்தையும் இந்திய ராணுவம் கடந்த திங்கட்கிழமை டிவிட்டரில் வெளியிட்டது. அந்த கால்தடத்தின் அளவு 32x15 இன்ச் இருந்ததாகவும் தெரிவித்தது. கடந்த காலங்களில் மகாலுவில் உள்ள தேசிய பூங்காவில் மட்டுமே இந்த பனிமனிதன் காணப்பட்டதாவும் இந்திய ராணுவம் தெரிவித்தது. 

ஆனால் இதனை அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் வாசிகளும், நேபாள ராணுவத்தின் உயரதிகாரிகளும் மறுத்துள்ளனர். அந்த கால்தடங்களில் அப்பகுதியில் அடிக்கடி காணப்படும் எனவும், அது பனிக்கரடியின் கால்தடம் என்றும் அவரக்ள் தெரிவித்தனர். 

News Counter: 
100
Loading...

Ramya