நோட்டா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்

share on:
Classic

நோட்டா குறித்த விழிப்புணர்வு தமிழக முழுவதும் ஏற்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

நோட்டா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே முழுமையாக எற்படுத்தவில்லை எனக் கூறி காஞ்சிபுரத்தை சேர்ந்த நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நோட்டா குறித்து பேருந்து நிலையங்கள், திரையரங்குகள்,  கடற்கரை, ரயில்நிலையங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind