நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக குஜ்ஜார் இன மக்களின் போராட்ட தலைவர் வீட்டில் நோட்டிஸ்

share on:
Classic

குஜ்ஜார் இன மக்களின் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக, அந்த அமைப்பின் தலைவர் வீட்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், குஜ்ஜார் அமைப்பினர் வாகனங்களுக்கு தீவைத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்படடது. இதன்காரணமாக, தோல்பூர், பாரத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அந்த அமைப்பின் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டிசை, அவரது வீட்டில் அதிகாரிகள் ஒட்டினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind