விம்பிள்டன் இறுதி போட்டியில் இரு ஜாம்பவான்கள் மோதல்..!

share on:
Classic

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் உடன் ரோஜர் ஃபெடரர் மோத உள்ளனர். 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் பாடிஸ்டா அகோட்-டை எதிர்கொண்ட நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6-2, 4-6, 6-3 மற்றும் 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதேபோல், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 3ஆம் நிலை வீரரான ஸ்பெயின் ரஃபேல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்தினார். 

இதில் 7-6, 1-6, 6-3 மற்றும் 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்ற ஃபெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சுடன் - ரோஜர் ஃபெடரர் மோத உள்ளனர். இரண்டு ஜாம்பவான்கள் மோதும் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind