தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிப்பதற்கு இந்த எண்களை அணுகவும்..!

share on:
Classic

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் புகார் தெரிவிப்பதற்கு வாட்சப் எண், கட்டணமில்லா தொலைபேசி களை அறிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் இதுவரை தேர்தல் பறக்கும்படையினரால் 3,39,95,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வருமானவரித் துறையினருடன் இணைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கடுமையாக கண்காணிக்க கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்து, வருமானவரித் துறை சார்பாக அளித்துள்ள தொடர்பு எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். 

பொதுமக்கள் 9445467707 என்ற வாட்சப் எண்ணுக்கும் 18004256669 என்ற கட்டணமில்லா தொலைபேசி என்ணுக்கும், itcontrol@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உரிய ஆவணங்கள் இன்றி ஒருவர் 50,000 ரூபாய்க்கு மேல்  பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார். உரிய ஆவணங்களுடன் 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால் வருமானவரித் துறை கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். மேலும், பெரிய அளவில் பணப் பரிமாற்றம் செய்யப்படும் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் சோதனை நடைமுறைகள் இருக்கும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

vinoth