தொப்பையை குறைக்க உதவும் கொட்டை வகைகள்..!

share on:
Classic

உடல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த நிலையில் பலருக்கும் பெரிய சவாலாக இருப்பது 'தொப்பை' தான். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் உட்கார நேரமின்றி உழைக்க, இன்று நாமோ முழு நேரமும் உட்கார்ந்தே உழைக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். அதிக கொழுப்பு சேர்க்கப்படும் நவீன உணவு முறையும் தொப்பை உருவாக ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. கடினமான உடல் பயிற்சிகள் மூலம் இத்தகைய தொப்பை கொழுப்புகளை குறைக்க முடியும். ஆனால் இங்கு பிரச்சனையே அதற்கான நேரம் பலருக்கும் வாய்ப்பதில்லை என்பது தான்.மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு எளிமையான தீர்வு ஒன்று உள்ளது. இது பற்றி தெரிந்து கொள்ள கீழே தொடர்ந்து படியுங்கள்.

 

பாதாம் :
புரத சத்து கொட்டி கிடைக்கும் பாதம் கொட்டைகளை எடை குறைப்பிற்கான உணவாக நீங்கள் தொடர்ந்து எடுத்து கொள்ளலாம். அதேபோல் ஜீரணமாக அதிக நேரம் எடுத்து கொள்ளும் புரதம்  உங்களுக்கு நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். மேலும் நார் சத்து அதிகம் சாப்பிட சொல்லும் உணர்வை அடக்கும். இதிலிருக்கும் அமினோ ஆசிட்டிகள் கொழுப்பை எரிக்க கூடியவை என்பதால் பாதம் கொட்டைகளை உட்கொள்வதின் மூலம் இயற்கையான முறையில் நீங்கள் வெகு சீக்கிரமே உடல் எடையை குறைக்க முடியும். 

வால்நட் : 
வால்நட்டுகள் பசியை கட்டுப்படுத்துவதில் வல்லவர்கள். இதிலிருக்கும் ஒமேகா 3 ஆசிட் மற்றும் புரத சத்து தான் இதை சாத்தியப்படுத்துகிறது. என்ணைய் பொருள் அதிகமாக இருக்கும்  வால்நட்களை கொண்டு சாலட், ஸ்மூத்தி செய்து கூட சாப்பிடலாம். ஆபிஸில் வேலை செய்யும் போதும் வால்நட்களை அருகில் வைத்து கொண்டு இடையிடையே எடுத்து கொள்ளலாம். அதே நேரம் வால்நட் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அளவில் மட்டும் கவனம் தேவை.

 

பிஸ்தா :
வெறும் 100 கிராம் பிஸ்தாவில் 20 கிராம் அளவிற்கு புரத சத்து இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா. முக்கியமாக ருசிக்காக உப்பு சேர்த்து விற்கப்படும் பிஸ்தாவை உட்கொள்வதால் உடலில் உள்ள நீர் சத்து குறைத்துவிடும்.எனவே அதை விடுத்தது பச்சையான பிஸ்தாவை எடுத்துக்கொள்ளலாம். இதில் ஒரு வகை கொழுப்பு நேர்த்தியான எடை குறைப்பிற்கு வழி வகுக்கும். நாள் முழுக்க உங்களை சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.இந்த உணவுவகைகள் மூலம் உடல் எடையை குறைத்து 'சிக்'கென்ற உடல் அமைப்பை பெற வாழ்த்துக்கள்.     

 

News Counter: 
100
Loading...

aravind