இந்தியா வைத்திருந்த மோசமான சாதனையை கைப்பற்றிய நியூசிலாந்து அணி..!

share on:
Classic

நடப்பு உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவரில் மிக குறைவாக ரன் சேர்ந்த அணி என்ற மோசமான சாதனையை நியூசிலாந்து அணி பதிவு செய்துள்ளது

12-வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக குப்டில் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் பவர் பிளே முடிவில் (10 ஓவர்கள்) 1 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 27 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் பவர் பிளே ஓவரில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிக குறைந்த ரன் சேர்த்த அணி என்ற மோசமான சாதனையை நியூசிலாந்து அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 28 ரன்கள் அடித்ததே நடப்பு உலகக்கோப்பையில் குறைந்த ரன்னாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Saravanan