இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்கு.!

share on:
Classic

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்கு.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய, நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசி நியூசிலாந்து வீரர்களை ரன் சேர்க்க விடாமல் திணறடித்தனர். தொடக்க வீரர் குப்டில் 1 ரன்னில் வெளியேற, பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேன் வில்லியம்சன் 67 ரன்களில் வெளியேற அவரையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்நிலையில் 46.1 ஓவர் முடிவில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஸ் டெய்லர் 67 ரன்னிலும் டாம் லாதம் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். அதன்பிறகு, மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டத்தை தொடங்க முடியாது என நடுவர்கள் அறிவித்தனர். இதனால், இந்த ஆட்டம் இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது 

News Counter: 
100
Loading...

Saravanan