உலகக்கோப்பை19 : பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது தென்னாப்பிரிக்கா..!

share on:
Classic

நடந்து வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி தோற்றது தென்னாப்பிரிக்க அணி..

     
12-வது உலகக்கோப்பை தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மைதானத்தில் நிலவிய ஈரப்பதத்தின் காரணாமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகியது. இதனால், 50 ஓவர்கள் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி கோக், ஹாஷிம் ஆம்லா களமிறங்கினர். குயின்டன் டி கோக் 5 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 49 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் சேரத்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. அணியில் அதிக பட்சமாக டெர் டஸன் 67 ரன்களும், ஆம்லா 55 ரன்களும் சேர்த்தனர்.

இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக கப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முன்ரோ ஆட்டமிழந்தார். 
மேலும், தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி சற்று தடுமாறியது. இதனிடையே அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் கடைசி வரை நின்று விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 

இந்நிலையில், 48.3 ஓவர்களில் அந்த அணி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக வில்லியம்சன் 106 ரன்களும், கிராண்ட் ஹோம் 60 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் அதிக பட்சமாக கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

  

 

தென்னாப்பிரிக்காவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

News Counter: 
100
Loading...

Saravanan