இதயங்களை நொறுக்கிய தோல்வி..!

share on:
Classic

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது..

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. மழையின் காரணமாக நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது 

இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் தலா 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளுக்கு 6 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார். 
அவரையடுத்து களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டாமல் நிதானமாகவே விளையாடி வந்த நிலையில் பண்ட் 56 பந்துகளுக்கு 32 ரன்கள் சேர்த்து வெளியேற அவரை தொடர்ந்து பாண்டியா 62 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி-ஜடேஜா நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில் நம்பிக்கையூட்டும் விதமாக அதிரடியாக ஆடிய ஜடேஜா 4 சிக்ஸ்ர் 4 பவுண்டரி உட்பட 59 பந்துகளுக்கு 77 ரன்கள் குவித்து வெளியேறினார்.

 

இவரது விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட தோனி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி இந்திய ரசிகர்களின் மொத்த கனவையும் கலைத்தார். 49.3 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 

News Counter: 
100
Loading...

Saravanan