டெல்லி சென்றார் ஓ.பன்னீர்செல்வம்..!

share on:
Classic

டெல்லியில் நாளை நடைபெற உள்ள மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி அவர் டெல்லி சென்றுள்ளார். மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்துக்குப் பின்னர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்க வாய்ப்புள்ளது. மதிய நிதி அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பொறுப்பேற்ற பின்னர், மாநில நிதியமைச்சர்களுடன் நடக்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது முக்கிய அமைச்சர்களையும் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News Counter: 
100
Loading...

Ragavan