ஒரு நாள் போட்டிகளில் 500-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா !!!

share on:
Classic

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நேற்றைய கிரிக்கெட் போட்டியில் இந்தியா என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது 500-வது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் பந்துவீச்சை தேர்ந்தடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவான் 21 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபுள்யூ ஆனார். இதே போல் அம்பதி ராயுடுவும் 18 ரன்கள் எடுத்து எல்.பி. டபுள்யூ ஆனார். இதனால் 17 ஓவர்களின் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து களமிறமிங்கிய தமிழக வீரர் விஜய்  சங்கர், கெப்டன் கோலி ஆகியோர் பொறுமையாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். 

 

விஜய் சங்கர் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என 46 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்திய அணியில் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர் நேற்றைய போட்டியில் குவித்த 46 ரன்களே அவரின் அதிக பட்ச ஸ்கோர் ஆகும். தொடர்ந்து நிதானமாக விளையாடிய கோலி தனது 40-வது சதத்தை பதிவு செய்து 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 48.2 ஓவர்களில் இந்திய அனி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

 

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக விளையாடிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 37 ரன்களும் மற்றும் உஸ்மான் கவாஜா 38 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 49 வது ஓவரின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 6 பந்துகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்ததால் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் தனது 500வது வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

 

News Counter: 
100
Loading...

Ramya