’சுந்தரபாண்டியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்

share on:
Classic

சுந்தரபாண்டியன் 2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபாகரன் இயக்கத்தில் வெளியாகிய படம் தான் சுந்தரபாண்டியன் இந்த படத்தை சசிகுமார் தயாரித்து, நடித்துள்ளார், சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார் மேலும் சூரி, இனிகோ பிரபாகரன், நரேன், தென்னவன், அப்புக்குட்டி, விஜய் சேதுபதி என பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். காதல் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது. இந்த படத்திலும் சசிகுமார் தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் இந்திரகுமார் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை இந்திரகுமார் தான் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே குற்றம் 23, தடம் போன்ற படங்களை தயாரித்துள்ளார். விரைவில் சுந்தரபாண்டியன் 2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan