ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் கசிவு..அதிகாரிகள் ஆய்வு..!

share on:
Classic

திருவாரூரில் விளைநிலத்தில் பாதிக்கப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்களை பதிப்பதற்கு டெல்டா பகுதி விவசாயிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இருப்பினும், விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களில் எண்ணெய் குழாய்களை பதித்து வந்தது. இந்நிலையில் எருக்காட்டூர் பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவரது விளைநிலத்தில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய் குழாயில் திடீர் கசிவு ஏற்பட்டது. 

இதனால் அரை ஏக்கர் நிலத்தில் அவர் பயிரிட்டிருந்த பருத்தி முற்றிலும் சேதமடைந்தது. இதனால் வேதனை அடைந்த விவசாயி செல்வராஜ், தனக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind