17-வது மக்களவை சபாநாயகராக பதவியேற்றார் ஓம் பிர்லா

share on:
Classic

17-வது மக்களவையில் சபாநாயகராக ஓம்பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

17 வது மக்களவையின் சபாநாயகருக்கான ராஜஸ்தான் மாநிலம் கோட்டா புந்தி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்ய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். அதோடு  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவளித்தனர்.

இதையடுத்து மக்களவையில் இன்று நடைபெற்ற சபாநாயகருக்கான தேர்தலில் ஓம்பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அதை தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட எம்.பிக்கள் முன்மொழிந்தனர். இதையடுத்து 17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அனைத்து கட்சி எம்.பி.க்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind