ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் மிதக்கும் வீடுகள்

share on:
Classic

ஆஸ்திரேலியாவில் பெய்த கனமழை காரணமாக 20000-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதக்கின்றன. 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. Townville பகுதியில் உள்ள அணையில், கொள்ளவை விட இரண்டு மடங்கு நீர் நிரம்பியதால், பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 20,000-க்கும்  மேற்பட்ட வீடுகள் நீரில் மிதக்கின்றன. மழை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind