போலி செய்திகளை தடுக்க WhatsApp-ல் புதிய அப்டேட்..!

share on:
Classic

போலியான செய்திகள் பரவுவதை தடுக்க இனி வாட்ஸ்ஆப்பில் ஒரு மெசேஜை வெறும் 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்னும் புதிய அம்சத்தை அறிமுகபடுத்தியுள்ளது அந்நிறுவனம்  .

5 முறை முறை மட்டும் :

வாட்ஸ் ஆப்பின் தலைமை நிறுவனமான பேஸ்புக், இந்த திட்டத்தை ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் நடைமுறைபடுத்தியது. ஆனால் இதன் மூலம் பல உண்மை தகவல்களையும் பகிர முடியாமல் போனது என்பதே உண்மை. இது வரை வாட்ஸ்ஆப் பயனாளிகள் ஒரு மெசேஜை 20 பேர் வரை பகிர முடியும். தற்போது வாட்ஸ்ஆப்பின் தரம் உயர்த்தப்பட்ட அம்சங்கள் குறித்து இந்தோனேசியாவில் அந்நிறுவனம் அறிவித்தது. அப்போது அந்த நிறுவனத்தின் சார்பில் பேசிய செய்தி தொடர்பாளர் "இந்த புதிய திட்டத்தின் மூலம் பார்வார்ட்(forward) மெசேஜ்களின் எண்ணிக்கை பரவலாக குறைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் இனி வாட்ஸ்ஆப்பை நன்கு தெரிந்தவர்களுடன், தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள மட்டும் பயன்படுத்தும் பழக்கம் அதிகரிக்கும்.

 

500 பக்கங்கள் காலி :

அதே போல் ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் 256 நபர்கள் மட்டுமே இருக்க முடியும். எங்கள் கணக்கு படி பார்த்தால் இனி ஒருவர் ஒரு மெசேஜை 5 குரூப்களில் பகிர்ந்தால் கூட 1280 பேருடன் மட்டுமே பகிர முடியும். ஆனால் முன்பு 5120 பேருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பிருந்தது. ஆனால் இத மூலம் போலி செய்திகள் பரவுவதை குறைக்க முடியும். அதே போல் கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் கூட பேஸ்புக்கில் தவறான செய்தி பரப்பி கொண்டிருந்த ஐரோப்பா , உக்ரைன் மற்றும் பல ஐரோப்பா நாடுகளை சேர்ந்த 500 பக்கங்களை மூடியது குறிப்பிடத்தக்கது.

end-to-end encryption :

பேஸ்புக் நிறுவனம் பகிரப்படும் செய்திகளை படித்து பார்த்து உண்மையானதா என்று கண்டுபிடிக்க குழு ஒன்றை களம் இறக்கியிருக்கிறது. ஆனால் வாட்ஸ்ஆப்பில் end-to-end encryption அம்சம் இருப்பதால், ஒரு மெசேஜை அனுப்பியவர், பெற்றுக்கொண்டவரை தவிர வேறு யாரும் அதை படிக்க முடியாது. எனவே, இந்த மாதிரி போலியான செய்திகளை கண்டுபிடிப்பது வாட்ஸ்ஆப்பை பொறுத்த வரை கடினமான காரியமாகவே இருக்கிறது. ஆனால் கடந்த வருட இறுதியில் வாட்ஸ்ஆப்பில் பரவும் போலி செய்திகள் தடுக்கும் வகையில் அந்நிறுவனம் கொள்கைகளை மாற்றுவதை குறித்து அந்நிறுவனத்துடன் பேச இருப்பதாக இந்திய செய்து துறை கூறியிருந்தது. அப்படி நடந்தால் encryption அம்சத்திற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க நேரும் என்று கூறப்படுகிறது .
 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu