வரத்து குறைந்ததால் எகிறிய மல்லிகை பூவின் விலை

Classic

உசிலம்பட்டியில் பூ வரத்து குறைந்ததால் மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ மூவாயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், வகுரணி, சந்தைப்பட்டி, கல்லூத்து, செட்டியபட்டி போன்ற பகுதிகளில் மல்லிகைப் பூ அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, பனிக்காலம் என்பதால் மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், உசிலம்பட்டி சந்தைக்கு 7 கிலோ மல்லிகை பூ மட்டுமே வந்திருந்ததால், ஒரு கிலோ மல்லிகை 3000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைத்தனர்.

இருப்பினும், மற்ற பூக்கள் விலை சரிந்து காணப்பட்டது. பிச்சிப் பூ 1000 ரூபாய்க்கும், செவ்வந்திப் பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால், மலர் சந்தைக்கு வருவோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth