ஆன்லைனில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சர்க்கரை விற்பனை

share on:
Classic

பிளிப்கார்ட்டில் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ.1க்கு ஒரு கிலோ சர்க்கரை என அதிரடி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. 

வளர்ந்து வரும் ஆன்லைன் விற்பனையில் இப்போது சமையல் பொருட்களும் விற்பனை செய்யப்படுக்கிறது. இதற்காக பிளிப்கார்ட் உருவாக்கிய தளம் சூப்பர்மார்ட். இதில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.1க்கும், 5 கிலோ சர்க்கரை ரூ.43க்கும் விற்பனையாகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.60ல் இருந்து ரூ.59 குறைக்கப்பட்டு ரூ.1க்கு விற்கப்படுகிறது. 

சர்க்கரை  மட்டுமல்லாது ஒரு லிட்டர் எண்ணை மற்றும் சில பருப்புகளையும் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. மளிகை பொருட்களை ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை  வாங்க வைக்க பல்வேறு  ஆஃபர்களை வழங்கி வரும் இந்த யுக்தி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

News Counter: 
100
Loading...

aravind