ஆந்திராவில் செம்மரம் வெட்ட நுழைந்ததாக ஒருவர் கைது..!

share on:
Classic

திருப்பதி அருகே கரகம்பாடி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட நுழைந்ததாக கூறி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பதி அடுத்த கரகம்பாடி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்டோர் வனப்பகுதிக்குள் நுழைய முயன்றனர். இதை பார்த்த போலீசார், அவர்களைப் பிடிக்க முயன்றபோது, கொண்டு வந்த பைகளை வீசி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. 

இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனா மரத்தூரைச் சேர்ந்த பெருமாள் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மரம் வெட்டும் உபகரணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடியவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev