வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது

share on:
Classic

பேர்ணம்பட்டு அருகே ரங்கம்பேட்டை வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். 

வேலூர் மாவட்டம், பேர்ணம்பட்டு அடுத்த ரங்கம்பேட்டை வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்துறையினரைப் பார்த்து தப்பி ஓட முயன்றவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ரங்கம்பேட்டையைச் சேர்ந்த முரளி என்பதும் காட்டுக்குள் வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர், அவரிடம் இருந்து, இரு சக்கர வாகனம், ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளை பறிமுதல் செய்தனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev