ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

share on:
Classic

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் கைதான அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார், நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற உதவி செவிலியர் அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, முக்கிய குற்றவாளியான அமுதவள்ளியின் சகோதரரான நந்தகுமார், கடந்த 16-ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில்  சரணடைந்தார். 

அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நாமக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் இருந்த நந்தகுமாரை நாமக்கல் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

News Counter: 
100
Loading...

aravind