குழந்தை விற்பனை விவகாரம் : மேலும் ஒரு பெண் கைது

share on:
Classic

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மேலும் ஒரு பெண்ணை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

ராசிபுரத்தில் கடந்த மாதம் குழந்தை விற்பனை வழக்கில் முன்னாள் செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்றதாக வெளியான தகவலை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அமுதவள்ளி, ரவிச்சந்திரன் மற்றும் இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இந்நிலையில், இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட பெங்களூருவை சேர்ந்த ரேகா என்ற பெண்ணை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.  நீதிபதி ஜெயந்தி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட ரேகாவை இம்மாதம் 31ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind