‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கருத்து கூட்டாட்சி, ஜனநாயகத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி

share on:
Classic

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் திட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையின் வேரினை பாதிக்கும் என்ற உண்மையின் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், செயற்கையாக எந்தவிதமான முயற்சிகள் செய்து ஒரே நேரத்தில் சட்டப்பேரைவக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சித்தால் அதை முழுமையாக எதிர்க்க உள்ளதாகவும் எச்சரித்தார். மேலும், இந்த நடைமுறை நாடாளுமன்ற ஜனநாயக முறையையும் சேதப்படுத்திவிடும் என்றும் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan