மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய தொழிலாளி இடி தாக்கி பலி..!

share on:
Classic

ஒசூர் அருகே இடிதாக்கி கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவர் பலியானார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பீளாம்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் மற்றும் மோட்டகானப்பள்ளியைச் சேர்ந்த முனிராஜ் இருவரும் கல்லுடைக்கும் தொழிலாளிகள். இருவரும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, மழைவந்ததால் சூளகிரியில் சாலையோரம் புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென இடி தாக்கியதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த முனிராஜ் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

News Counter: 
100
Loading...

aravind