ஒன் பிளஸ் ஸ்டோரின் முதல் ஆண்டு விழா கொண்டாட்டம்..

share on:
Classic

சென்னையில் ஒன் பிளஸ் போனுக்காக பிரத்யேகயாக அமைக்கப்பட்ட ஒன் பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரின் முதல் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. 

சர்வதேச மொபைல் நிறுவனமான ஒன் பிளஸ் நிறுவனம், தொழில்நுட்பத்தில் புதுப்புது உத்திகளை கையாண்டு வருகிறது. அந்நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் என்ற பிரத்யேக கடை சென்னையில் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று முதல் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல இசையமைப்பாளர்அனிருத் கலந்துகொண்டார். மேலும் அவர் தனது இசையமைப்பில் உருவான சிறந்த பாடல்களை பாடி  ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து ஒன் பிளஸ் ப்ரோ 7 என்ற புதிய மாடலையும் அவர் அறிமுகம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஒன் பிளஸ் இந்தியாவின் பொது மேலாளர் விகாஸ் அகர்வால் பேசிய போது “ இந்தியாவில் எங்கள் பயணத்தின் மைல் கல்லாக இந்த ஆண்டுவிழாவை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஒன் பிளஸ் ரசிகர்கள் ஆகியோருக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த கொண்டாட்டங்கள். நாங்கள் இந்த நேரத்தில் இந்த விழாவை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அனிருத் “ இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த ஒன் பிளஸ் நிறுவனத்திற்கு நன்றி. என் இசையை விரும்பும் ஒன்பிளஸ் ரசிகர்களை சந்திக்க எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ஒன்பிளஸ் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தை வழங்குவதை போல, எனது இசையை ரசிப்பவர்களை, மகிழ்ச்சியாக வைத்திருக்க தொடர்ந்து கடினமாக உழைப்பேன்” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya