இந்தியாவின் மற்ற பொய்களும் விரைவில் வெளிவரும் : பாகிஸ்தான் கருத்து

share on:
Classic

இந்தியாவின் மற்ற பொய்களும் விரைவில் வெளிவரும் என்று நம்புவதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

பாஜக கட்சியின் பெண் தொண்டர்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் நேற்று உரையாற்றினார். அப்போது “ இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானின் ஒரு குடிமக்கள் கூட கொல்லப்படவில்லை. அந்நாட்டின் ராணுவத்தின் மீது சிறு தாக்குதல் கூட நடத்தப்படவில்லை. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெயிஷ் இ தீவிரவாதிகள் மட்டும் தான் நமது பாதுகாப்பு படைகளின் குறிக்கோளாக இருந்தது. தற்காப்புக்காக மட்டுமே இந்தியா வான்வழி தாக்குதலை பாலகோட்டில் நடத்தியது. அதனை சர்வதேச சமூகமும் ஏற்ற்க்கொண்டது ” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சுஸ்மா ஸ்வராஜின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ இறுதியாக உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதே போல இந்தியாவின் மற்ற பொய்களான 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாகிஸ்தானின் 16 போர்விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது போன்ற விவகாரத்தில் உண்மை வெளியில் வரும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 
 

News Counter: 
100
Loading...

Ramya