சர்ச்சையை ஏற்படுத்திய நிதின் கட்கரி பேச்சு

share on:
Classic

வீட்டை கவனித்துக்கொள்ள முடியாதவரால் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் பாஜகவின் மாணவர் அமைப்பான பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தன்னிடம் பலரும் பாஜகவுக்காக, நாட்டுக்காக தங்களது வாழ்க்கையை தியாகம் செய்ய விரும்புவதாகக் கூறுவதாகவும், அவர்களுக்கு முதலில் குடும்பத்தை கவனியுங்கள் என தான் பதில் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஏனெனில் யாரால் குடும்பத்தை நிர்வகிக்க முடியவில்லையோ, அவரால் நாட்டை சரியாக நிர்வகிக்க முடியாது, அதனால் குடும்ப பராமரிப்பிற்கும், குழந்தை வளர்ப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நிதின் கட்கரியின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind