இந்திய பேரழிவிற்கு ஒரே ஒரு நபரே காரணம் - மு. க. ஸ்டாலின்

share on:
Classic

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியா அழிவுப் பாதையில் சென்றதற்கு ஒரே ஒரு நபர் தான் காரணம் என பிரதமர் மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் சூசகமாக விமர்சித்துள்ளார்.

 
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வங்கிகளின் வெளியே முடிவில்லா நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்கிடந்ததாகவும், சிலர் வங்கி வாசலிலேயே உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஒரே ஒரு நபரால் ஒட்டுமொத்த இந்தியாவும் பேரழிவை சந்தித்திருப்பதாக பிரதமர் மோடியை ஸ்டாலின் சூசகமாக விமர்சித்தார். 

இந்த டுவிட்டர் பதிவோடு சேர்த்து பணமதிப்பிழப்பின் கோரத்தை விவரிக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
 

News Counter: 
100
Loading...

aravind