123-வது மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது..!! உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்

share on:
Classic

உதகை தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். 

புகழ்பெற்ற சுற்றுலா தளமான உதகையில் கோடை சீசன் களைக்கட்டியுள்ளதை அடுத்து 123வது மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். 1 லட்சத்து 20 ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கபட்டுள்ள பிரம்மாண்ட பாராளுமன்ற கட்டிடம், மலர் அருவி உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின. கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் மலர்க்கண்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர். 
 

News Counter: 
100
Loading...

Ramya