இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எங்களை சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது..!

share on:
Classic

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் புனித ஈஸ்டர் பெருவிழா நாளை கொண்டாட தேவாலயங்களில் குழுமியிருந்த மக்கள் மீது மிகக் கொடூரமான வெடி குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கும் செய்தி சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறியுள்ளனர். பெரும்பாலும் தமிழ் கிறிஸ்தவ பெருமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முற்றிலும் மனிதாபிமானமற்ற முறையில், சிறிதும் இரக்கமற்ற வகையில் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்

News Counter: 
100
Loading...

vinoth