எம்.பி ரவீந்திரநாத் குமார் என பெயர்பொறித்த கல்வெட்டு குறித்த கேள்விக்கு பதில் தர மறுத்த ஓ.பி.எஸ்..!

share on:
Classic

நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  சிறப்பு பூஜை செய்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் வருகையையொட்டி ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், நாளை நடக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார். மேலும், ரவீந்திரநாத் எம்.பி என பெயர் பொறித்த கல்வெட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தர மறுத்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind