காட்டை அழித்த பொக்லைன் வண்டியிடம் சண்டையிட்ட ஓரங்குட்டான்..!!

share on:
Classic

காட்டை அழித்த பொக்லைன் வண்டியிடம் ஓரங்குட்டான் சண்டையிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் காலநிலை மாற்றம் குறித்து டேவிட் அட்டன்பரோ என்பவர் ஆவணபடம் ஒன்றினை வெளியிட்டார். அதில்  நுகர்வோர் தேவைகள் அதிகரிப்பை அடுத்து காடுகள் அழிக்கப்பட்டு பனை எண்ணெய் தோட்டங்களாக மாற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அந்த காட்டில் ஓரங்குட்டான் ஒன்று ஓடிச் சென்று காடுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை நோக்கி சென்று வண்டியை தாக்கி சண்டையிட்டது. இந்த காட்சிகளையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan