பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலையை ஆவணப்படமாக எடுக்கும் அமெரிக்க ஆஸ்கர் நாயகன்

share on:
ஜமால் கஷோகி, ஷியன் பென், சவுதி அரேபியா, Jamal Khashoggi, Sean Penn
Classic

துருக்கி:  சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி தொடர்பான ஆவணப்படத்தை எடுக்க உள்ளார் அமெரிக்காவின் ஆஷ்கார் நாயகன் ஷியன் பென் (Sean Pe) 

துருக்கியில் உள்ள சவுதி துதாரகத்திற்கு கடந்த அக்டோபர் 2ம் தேதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சென்றார். பின் அவர் அங்கிருந்து திரும்பவில்லை, இதை விசாரித்த துருக்கி அரசு ஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார் என அறிவித்தது. 

இதனை முதலில் மறுத்த சவுதி அரசு பின் அந்த செய்தி உண்மை தான் என்றும் அதில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. சவுதி இளவரசர் குறித்து ஜமால் கஷோகி சர்ச்சையான கட்டுரை வெளியிட்டதால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது தெடார்பான விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த நடிகரும், தயாரிப்பாளாருமான ஷியன் பென், ஜமால் கஷோகி கொலை ஆவணப்படத்தை எடுக்க உள்ளார். ஷியன் பென் இதுவரை இரண்டு ஆஷ்கர் விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

ஜமால் சவுதி துரோகத்திற்கு சென்றது முதல் துருக்கி அரசின் தற்போதைய விசாரணை குறித்த அனைத்து தகவல்களையும் பென் திரட்டி வருகிறார். விரைவில் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட உள்ளதாகாவும் அவர் தெரவித்துள்ளார். 
 

News Counter: 
100
Loading...

vijay