எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் - பிரேமலதா விஜயகாந்த்

share on:
Classic

தங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர். அதற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “ நாளை நமதே நாற்பதும் நமதே என்று சொல்லக்கூடிய அளவு 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாக செயல்படுகிறது. 18 தொகுதி இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

Ramya