பீகாரில் மூளைக்காய்ச்சலால் 117 குழந்தைகள் உயிரிழப்பு..!

share on:
Classic

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

பீகார் மாநிலம்  முசாஃபர்பூரில் கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது.  முசாஃபர்பூரில் தற்போது வரை 117 குழந்தைகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளன. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர். 

லிட்சி பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு குறைகிறது எனவும் சந்தையில் விற்கும் லிட்சி பழங்களை ஆய்வு செய்யவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்த குழந்தைகள் உயிரிழந்து வருவதால், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

 

News Counter: 
100
Loading...

aravind